மத்திய பிரதேசம், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பெகாசஸை மத்திய அரசு பயன்படுத்தியது.. நானா படோல் பகீர் குற்றச்சாட்டு

மத்திய பிரதேசம், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பெகாசஸை மத்திய அரசு பயன்படுத்தியது.. நானா படோல் பகீர் குற்றச்சாட்டு

மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பெகாசஸை மத்திய அரசு பயன்படுத்தியது என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் சிங் படேல் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ், 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், பணியில் இருக்கும் நீதிபதி, வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட உறுதி செய்யப்பட்ட தொலைப்பேசி எண்கள், இஸ்ரேலின் உளவு சாப்ட்வேரான பெகாசஸை பயன்படுத்தி அடையாளம் தெரியாத அமைப்பால் கண்காணிக்கப்பட்டதாக கடந்த மாதம் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.

மத்திய பிரதேசம், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பெகாசஸை மத்திய அரசு பயன்படுத்தியது.. நானா படோல் பகீர் குற்றச்சாட்டு
பெகாசஸ் சாப்ட்வேர்

இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல், மத்திய பிரதேசம், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பெகாசஸை மத்திய அரசு பயன்படுத்தியது என்று குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பிரதமரே இந்திய ஜனநாயகத்தை அவமதிக்கிறார். எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்தவொரு பிரச்சினை குறித்தும் அவர் பேசுவதில்லை. பெகாசஸ் தொடர்பான குற்றச்சாட்டுக்களை பிரதமர் மோடி தெளிவுப்படுத்த வேண்டும்.

மத்திய பிரதேசம், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பெகாசஸை மத்திய அரசு பயன்படுத்தியது.. நானா படோல் பகீர் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி

இந்தியாவில் சுமார் 300 பேர் அந்த திட்டத்தின் கீழ் (உளவு பார்க்கப்பட்டனர்) இருந்தனர். பல அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கண்காணிப்பில் இருந்தனர். இந்த முழு பிரச்சினையையும் தெளிவுப்படுத்த அவர் தலைமை ஏற்க வேண்டும். அரசியலமைப்பு நமக்கு தனியுரிமைக்கான உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடக அரசுகளை வீழ்த்த (கவிழ்க்க) பெகாசஸை மத்திய அரசு பயன்படுத்தியது. இந்த பாவம் (ஆட்சி கவிழ்ப்பு) குறித்து பிரதமர் மோடிக்கு தெரிந்து இருந்தால், அவர் முன்னால் வந்து உண்மையை சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.