மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானில் அரங்கேறிய காட்டுமிராண்டித்தனம்…… கொரோனா வைரஸ் சர்வே எடுத்த பெண் பணியாளர்களை தாக்கிய கும்பல்…..

 

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானில் அரங்கேறிய காட்டுமிராண்டித்தனம்…… கொரோனா வைரஸ் சர்வே எடுத்த பெண் பணியாளர்களை தாக்கிய கும்பல்…..

ராஜஸ்தானில் வீடு வீடாக கொரோனா வைரஸ் தொடர்பாக சர்வே எடுத்து கொண்டு இருந்த 5 பெண் பணியாளர்களை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாஅத் நடத்திய மத மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட தங்களது மாநிலத்தவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல் ராஜஸ்தானில் தப்லீக் ஜமாஅத் மாநாட்டுக்கு சென்று திரும்பிய டாங்க் பகுதியை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.

கும்பலால் தாக்கப்பட்ட பெண்கள்

இதனையடுத்து அந்த பகுதி முழுவதிலும் வீடு வீடாக சென்று யாருக்கும் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பது குறித்து அரசு பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், முஸ்லிம்கள் அதிகம் உள்ள கலி பல்தான் தீவானி கா குவான் பகுதியில் 5 பெண்கள் கொண்ட குழு ஒன்று கொரோனா வைரஸ் தொடர்பான சர்வே எடுத்து கொண்டு இருந்தது.

எப்.ஐ.ஆர்., கைது

அப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் கொண்ட சுமார் 40 பேர் கொண்ட குழு அந்த பெண் பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்ததுடன் சர்வே பேப்பர்களை பறித்துள்ளனர். பின்னர் அவர்களிடம் தவறாக நடந்ததுடன் அவர்களை தாக்கி உள்ளனர். இந்த தகவலை அறிந்த கோட்வாலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சர்வே பணியாளர்களை அந்த இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து 10 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை செய்ய சென்ற மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மீது அந்த பகுதி மக்கள் கற்கள் வீசி தாக்கினர்.