மத்திய பாதுகாப்பு படை கேன்டீனில் சுதேசி பொருட்கள் மட்டுமே விற்பனை! – அமித்ஷா அறிவிப்பு

 

மத்திய பாதுகாப்பு படை கேன்டீனில் சுதேசி பொருட்கள் மட்டுமே விற்பனை! – அமித்ஷா அறிவிப்பு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் பாதுகாப்பு படை கேன்டீன்களில் இனி சுதேசி தயாரிப்பு பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் பாதுகாப்பு படை கேன்டீன்களில் இனி சுதேசி தயாரிப்பு பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு.
பிரதமர் மோடி மே 12ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் பேசும்போது, தற்சார்பு, உள்ளூர் தயாரிப்பு பற்றிக் கூறினார். மேலும், 20 லட்சம் கோடியில் பொருளாதார உதவிகள் அறிவிக்கப்படும் என்றார். பிரதமரின் இந்த அறிவிப்பை வரவேற்று அமித்ஷா ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

amy-canteen

அதில், “இந்தியாவை தற்சார்புடையதாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதும், உள்நாட்டு உற்பத்தியை பயன்படுத்த வேண்டும் என்ற கூறியிருப்பதும் நாளை இந்தியாவை உலக அளவில் முன்னிலைக்கு கொண்டு செல்லும். 

பிரதமரின் இந்த அறிவிப்பை முன்னெடுத்து செல்லும் வகையில் உள்துறை அமைச்சகம் இனி சென்ட்ரல் ஆர்ம்ஸ் போலீஸ் ஃபோர்ஸ் (சி.ஏ.பி.எஃப்) கேன்டீன்களில் உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்பனை செய்வது என்று முடிவெடுத்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து சி.ஏ.பி.எஃப் கேன்டீன்களிலும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். 10 லட்சம் சிஏபிஎஃப் பணியாளர்கள் மூலம் அவர்களைச் சார்ந்த 50 லட்சம் குடும்பங்கள் இனி இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டுமே பயன்படுத்துவார்கள்.

நாட்டு மக்கள் அனைவரும் முடிந்த அளவுக்கு இந்தியத் தயாரிப்பு பொருட்களை மட்டுமே பயன்படுத்தி இதை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் இந்தியத் தயாரிப்பு பொருட்களை மட்டுமே பயன்படுத்துவேன் என்று உறுதிமொழி ஏற்பதன் மூலம், அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா தன் தேவைகளை தானே நிறைவேற்றிக்கொள்ளும்  நாடாக மாறிவிடும்” என்று கூறியுள்ளார்.

சென்ட்ரல் ஆர்ம்ஸ் போலீஸ் ஃபோர்ஸில் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்), அஸ்ஸாம் ரைஃபில்ஸ், மத்திய தொழிலக பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ், இந்தோ- திபெத்தியன் எல்லை போலீஸ், தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) உள்ளிட்டவை அடங்கும்