மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்ட இந்திய பொருளாதாரத்தின் சாதனைகள் மற்றும் மைல்கற்கள்

 

மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்ட இந்திய பொருளாதாரத்தின் சாதனைகள் மற்றும் மைல்கற்கள்

சர்வதேச அளவில் பொருளாதார பலத்தில் ஐந்தாவது பெரிய நாடு இந்தியா உள்ளிட்ட சில சாதனைகளை மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட இந்திய பொருளாதாரத்தின் சாதனைகள்

* இந்தியா தற்போது சர்வதேச அளவில் பொருளாதார பலத்தில் ஐந்தாவது பெரிய நாடாக விளங்குகிறது

* 2014-19 வரையிலான காலத்தில் இந்தியாவின்  அன்னிய நேரடி முதலீடு 28,400 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அதேசமயம் 2009-14 வரையிலான காலத்தில் இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு 19,000 கோடி டாலராக இருந்தது.

* 2006-16 வரையிலான காலகட்டத்தில் 21.10 மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

* 2019 மார்ச் 19ம் தேதி நிலவரப்படி, மத்திய அரசின் கடன் 48.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது 2014 மார்ச்சில் 52.2 சதவீதமாக இருந்தது.

ரோபாட்டிக்ஸ்

* தொழில்நுட்பங்களின் பெருக்கம் (பகுப்பாய்வு, இயந்திர கற்றல், ரோபாட்டிக்ஸ், பயோ-இன்பார்மேடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணிறிவு) மற்றும் இந்தியாவில் உற்பத்தி வயதுக்குட்டபவர்களில் (15-65 வயது) அதிக எண்ணிக்கையில் மக்கள் உள்ளனர்.

* அமைப்பில் உள்ள பல சிக்கல்களை ஜி.எஸ்.டி. நீக்கியது.

* 2014-19 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 4.5 சதவீத பணவீக்கத்துடன்,  பொருளாதாரத்தில் 7.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது