மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்காண அறிவுப்பை சிபிஎஸ்இ கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அதில், அதில் இந்தத் தேர்வானது வரும் செப்டம்பர் 16-ம் தேதி நடத்தப்படும் எனவும், ஜூன் 22-ம் தேதி முதல் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பிக்க ஜூலை 19-ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், இந்த அறிவிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. மேலும், விண்ணப்பிப்பதற்கான மாற்று தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்தது.

இந்நிலையில், இந்த தேர்வுக்கான புதிய அறிவிப்பை கடந்த செவ்வாய்க்கிழமை சிபிஎஸ்இ மீண்டும் வெளியிட்டது. அதன்படி, ஆகஸ்ட் 1ம் தேதி (இன்று) முதல் இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பிக்க ஆகஸ்ட் 27-ம் தேதி கடைசி நாள் எனவும், கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 30-ம் தேதி கடைசி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.ctet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது