மத்திய அரசை விமர்த்த பிரிட்டன் எம்பி இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

 

மத்திய அரசை விமர்த்த பிரிட்டன் எம்பி இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

டெல்லி வந்த அவர், துபாய்க்கு அனுப்பிவைக்கப்பட்டார். குடும்பத்தினரையும்,‌ நண்பர்களையும் சந்திப்பதற்காக இந்தியா செல்‌‌ல இ-விசா மூலமாக பயணம் மேற்கொண்டதாகவும், ஆனால் எவ்வித விளக்கமும் இன்றி இந்திய அரசு தனது விசாவை ரத்து செய்துவிட்டதாக டெபி ஆபிரகாம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை வாபஸ் பெற்றதற்காக இந்தியாவின் நடவடிக்கையை விமர்சித்த பிரிட்டன் பெண் எம்பி டெபி ஆபிரகாம்ஸ் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி‌ மறுக்கப்பட்டது. 

டெல்லி வந்த அவர், துபாய்க்கு அனுப்பிவைக்கப்பட்டார். குடும்பத்தினரையும்,‌ நண்பர்களையும் சந்திப்பதற்காக இந்தியா செல்‌‌ல இ-விசா மூலமாக பயணம் மேற்கொண்டதாகவும், ஆனால் எவ்வித விளக்கமும் இன்றி இந்திய அரசு தனது விசாவை ரத்து செய்துவிட்டதாக டெபி ஆபிரகாம்ஸ் தெரிவித்துள்ளார். பிரிட்டன் எம்பி விசா ரத்து செய்யப்படு‌து குறித்து அவருக்கு முறையாக அறிவிக்கப்பட்டதாகவும், இருந்தபோதிலும் அவர் டெல்லிக்கு வந்ததாக உள்துறை செய்தித் தொடர்பாளர்‌ ஒருவர் தெரிவித்துள்ளார். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்பியான டெபி ஆபிரகாம்ஸ், பிரிட்டனில் காஷ்மீருக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராக உள்ளார்.