மத்திய அரசை தொடர்ந்து உத்தர பிரதேச அரசும் அகவிலைப்படி உயர்வை தற்காலிகமாக ரத்து செய்தது….

 

மத்திய அரசை தொடர்ந்து உத்தர பிரதேச அரசும் அகவிலைப்படி உயர்வை தற்காலிகமாக ரத்து செய்தது….

உத்தர பிரதேசத்தில் மாநில பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய அகவிலைப்படி உயர்வை 18 மாதங்களுககு அம்மாநில அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கா நடவடிக்கைகளுக்கு ஏராளமான நிதி தேவைப்படுகிறது. இதனையடுத்து மத்தி அரசு அத்தியாவசியமில்லாத செலவினங்களை நிறுத்தி விட்டது. மேலும் பிரதமர் முதல் எம்.பி.க்கள் வரை அனைவரது சம்பளமும் குறைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அதிரடியாக நிறுத்தி வைத்தது.  

அகவிலைப்படி

2020 ஜூலை 1ம் தேதி முதல் 2021 ஜனவரி 1ம் தேதி வரையிலான 6 மாத காலத்துக்கு 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் தற்போது உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு அம்மாநில பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான புதிய அகவிலைப்படி உயர்வை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

அரசு பணியாளர்கள்

இது தொடர்பாக உத்தர பிரதேச நிதித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், கொரோனா வைரஸால் எழும் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா விளைவாக நடைமுறைப்படுத்துப்பட்டுள்ள லாக்டவுனால் மாநில அரசின் வருவாய் கடுமையாக சரிவு கண்டுள்ளதால், மாநில பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய அகவிலைப்படி உயர்வு 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை  18 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் இந்த முடிவால் சுமார் 16 லட்சம் மாநில பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள், 3 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 12 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.