மத்திய அரசு ஒருபுறமும் மாநில அரசு ஒருபுறமும் மக்களை பந்தாடுகிறது – திருநாவுக்கரசர்

 

மத்திய அரசு ஒருபுறமும் மாநில அரசு ஒருபுறமும் மக்களை பந்தாடுகிறது – திருநாவுக்கரசர்

பெரும்பாலானோர் பயன்படுத்தும் பொருள் பால். பெரும்பான்மையான மக்களை பாதிக்கும் வகையில் அரசு முடிவு செய்யக்கூடாது.  

மத்திய அரசு ஒரு பக்கம் பொருட்களின் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மாநில அரசு ஒரு புறம் உயர்த்துவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,  “பொது மக்களை பாதிக்கக்கூடிய விஷயங்களை அரசாங்கம் நிதானமாக, யோசித்து முடிவு செய்ய வேண்டும். எல்லோரிடமும் கலந்து முடிவு செய்ய வேண்டும். பெரும்பாலானோர் பயன்படுத்தும் பொருள் பால். பெரும்பான்மையான மக்களை பாதிக்கும் வகையில் அரசு முடிவு செய்யக்கூடாது.  அந்த வகையில் பால் விலை உயர்வு என்பது வரவேற்புக்கு உரியது அல்ல கண்டனத்திற்குரியது. 

Thirunavukarasar

பால் உற்பத்தியாளர்கள் மற்றும் அதில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எப்போதாவது அல்லது இடைவேளையில் பால் விலையை உயர்த்த கூடிய ஒரு விஷயம்.  நினைத்தபோதெல்லாம் விலை ஏற்றக்கூடாது. மத்திய அரசு ஒரு பக்கம் பொருட்களின் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மாநில அரசு ஒரு புறம் உயர்த்த மக்கள் தாங்குகிற சக்தியைத் தாண்டி இது போன்ற விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். 

ஜாதிகள் வாரியாக பள்ளி மாணவர்களுக்கு கையில் கயிறு அல்லது ஆடைகள் அணிவது நவீன உலகத்தில் எங்கே செல்கிறோம் என்ற தெரியவில்லை. இது போன்ற விஷயம் நடந்தால் கண்டனத்திற்குரியதாகும்” என்றார்.