மத்திய அரசு அறிவிப்பின் படி வருமான வரித்துறை வழக்கை வாபஸ் பெற வேண்டும்! – சசிகலா புதிய மனு

 

மத்திய அரசு அறிவிப்பின் படி வருமான வரித்துறை வழக்கை வாபஸ் பெற வேண்டும்! – சசிகலா புதிய மனு

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் 1994-95ம் ஆண்டுகளில் சசிகலா வாங்கிக் குவித்த சொத்துக்கள் தொடர்பான விவரங்களை லஞ்ச ஒழிப்புத் துறை வருமான வரித்துறைக்கு அனுப்பியது. அதன் அடிப்படையில், வருமான வரியாக ரூ.48 லட்சத்தை செலுத்த வேண்டும் என்று சசிகலாவுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் படி தன் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெற வருமான வரித்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சசிகலா வழக்கு தொடர்ந்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் 1994-95ம் ஆண்டுகளில் சசிகலா வாங்கிக் குவித்த சொத்துக்கள் தொடர்பான விவரங்களை லஞ்ச ஒழிப்புத் துறை வருமான வரித்துறைக்கு அனுப்பியது. அதன் அடிப்படையில், வருமான வரியாக ரூ.48 லட்சத்தை செலுத்த வேண்டும் என்று சசிகலாவுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து தீர்ப்பாயத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2008ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

sasikal-09

இந்த நிலையில் சசிகலா தரப்பில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் பிறப்பித்த சுற்றறிக்கைபடி, ரூ.1 கோடி அல்லது அதற்கு கீழ் உள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. என்னுடைய வழக்கு ரூ.48 லட்சம் அளவுக்குத்தான் உள்ளது. எனவே, எனக்கு எதிராக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கைத் திரும்பப் பெற சில நிபந்தனைகள் உள்ளது. வருவாய் தணிக்கைப் பிரிவு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஆகியவற்றை திரும்பப் பெற முடியாது” என்று கூறினார். 
இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை தன்னுடைய பதிலை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க உத்தரவிடப்பட்டது. மேலும் வழக்கு விசாணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.