மத்தியப் பிரதேசத்தில் கவிழ்ந்தது காங்கிரஸ் அரசு ! – ஆட்சியைக் கைப்பற்றுகிறது பா.ஜ.க

மத்தியப் பிரதேசத்தில் கவிழ்ந்தது காங்கிரஸ் அரசு ! – ஆட்சியைக் கைப்பற்றுகிறது பா.ஜ.க

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கடத்தப்பட்டு பெங்களூருவில் சிறை வைக்கப்பட்டதாக காங்கிரஸ் கூறியது. ஆனால் விருப்பத்தின் பேரிலேயே அவர்கள் உள்ளார்கள் என்று பா.ஜ.க கூறி வந்தது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக இந்த நாடகம் நீடித்து வந்த நிலையில் முதல்வர் பதவியிலிருந்து கமல்நாத் ராஜினாமா செய்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது. விரைவில் பா.ஜ.க-வின் சிவ்ராஜ் சிங் சௌகான் முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கடத்தப்பட்டு பெங்களூருவில் சிறை வைக்கப்பட்டதாக காங்கிரஸ் கூறியது. ஆனால் விருப்பத்தின் பேரிலேயே அவர்கள் உள்ளார்கள் என்று பா.ஜ.க கூறி வந்தது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக இந்த நாடகம் நீடித்து வந்த நிலையில் முதல்வர் பதவியிலிருந்து கமல்நாத் ராஜினாமா செய்துள்ளார்.

Kamal-Nath.jpg

கமல்நாத் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கமல்நாத் வீட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு, பெங்களூருவில் உள்ள 16 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ஏற்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். மேலும், பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் ராஜினாமாவும் ஏற்கப்படுவதாக அறிவித்தார்.

madhya pradesh-bjp

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமல்நாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தன்னுடைய ராஜினாமாவை அறிவித்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளிக்க உள்ளதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து இத்தனை நாள் நீடித்துவந்த ஆட்சி மாற்ற நாடகம் முடிவுக்கு வந்துள்ளது.
தற்போதைய நிலையில் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை குறைந்துவிட்டது. பா.ஜ.க-விடம் போதுமான எம்.எல்.ஏ-க்கள் உள்ளதால் அக்கட்சியை சார்ந்த சிவ்ராஜ் சிங் சௌகான் முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.