மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்

 

மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்

மத்தியப்பிரதேசத்தில் மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோர நேரம் ஒதுக்குமாறு அம்மாநில ஆளுநருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது

போபால்: மத்தியப்பிரதேசத்தில் மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோர நேரம் ஒதுக்குமாறு அம்மாநில ஆளுநருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில், தெலங்கானா மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக-விடம் இருந்து ஆட்சியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரசிடம் இருந்து மிசோ தேசிய முன்னணி ஆட்சியை பறித்துள்ளது. ஆனால், மத்தியப்பிரதேசத்தில் மட்டும் பாஜக-காங்கிரஸ் இடையே இழுபறி நிலவி வந்தது. இதையடுத்து, இறுதி முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளிலும், பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 1, பகுஜன் சமாஜ்வாதி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 தொகுதிகளில் தேவை என்ற நிலையில், அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோர நேரம் ஒதுக்குமாறு அம்மாநில ஆளுநருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கமல்நாத் எழுதியுள்ள அந்த கடிதத்தில், பெரும்பான்மை ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி இருப்பதாகவும், சுயேட்சைகளின் ஆதரவும் தங்களுக்கு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.