மது குடித்தால் தொண்டையில் உள்ள கொரோனா வைரஸ் செத்துடும்…. அடிச்சு சொல்லும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.

 

மது குடித்தால் தொண்டையில் உள்ள கொரோனா வைரஸ் செத்துடும்…. அடிச்சு சொல்லும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.

ஆல்கஹாலை பயன்படுத்தி கை கழுவினால் கையில் உள்ள கொரோனா வைரஸ் கிருமிகளை அகற்ற முடியும் என்றும், மது குடித்தால் தொண்டையில் உள்ள கொரோனா வைரஸை அழிக்கவும் செய்யும் என ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கோட்டா மாவட்டம் சங்கோட் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாரத் சிங். இவர் ராஜஸ்தானில் லாக்டவுனுக்கு மத்தியில் மதுபான கடைகளை திறக்க வலியுறுத்தி முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாரத் சிங்

மதுபானம் ஒரு கேடுவிளைவிக்கும் பொருள் என்பதால் லாக்டவுன் சமயத்தில் மதுபான விற்பனையை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ விற்பனையை அனுமதிக்காது. இருப்பினும் மதுபான கடைகள் மூடப்படுவது மாநிலத்தின் வருவாயின் முதுகெலும்பை உடைக்கிறது. ஒயின் ஷாப்கள் மூடப்பட்டு இருப்பதால் கள்ள சாராயம் உற்பத்தி செய்வது அதிகரித்துள்ளது. கள்ள சாராயம் உள்கொள்வதால் மக்கள் இறப்பதோடு, மாநில அரசுக்கும் பெரிய வருவாய் இழப்புக்கும் வழிவகுக்கிறது.

முதல்வர் அசோக் கெலாட்

பரத்பூரின் ஹலேனா பகுதியில் கள்ள சாராயத்தை குடித்து 2 பேர் பலியானதாக ஊடகங்களில் தகவல் வந்துள்ளது. ராஜஸ்தான் அரசு இந்த நிதியாண்டில் மதுபானங்கள் மீதான கலால் வரி வாயிலாக ரூ.12,500 கோடி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. லாக்டவுனால் இந்த இலக்கை எட்டுவதற்கான வாய்ப்புகள் தெரியவில்லை. எனவே மதுபானங்கள் மீதான கலால் வரியை அரசு அதிகரிக்க வேண்டும். அரசு மதுபான கடைகளை திறக்க அனுமதித்தால் மது வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் கிடைக்கும் மற்றும் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். ஆல்கஹாலை பயன்படுத்தி கை கழுவினால் கையில் உள்ள கொரோனா வைரஸ் கிருமிகளை அகற்ற முடியும் என்றும், மது குடித்தால் தொண்டையில் உள்ள கொரோனா வைரஸை அழிக்கக்கூடும். எப்படியிருந்தாலும் கள்ள சாராயத்தை குடிப்பதை காட்டிலும் மதுபானத்தை அருந்துவது நல்லது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.