மது கிடைக்காததால் சேவிங் லோஷனை குடித்த நண்பர்கள்.. இருவர் உயிரிழப்பு!

 

மது கிடைக்காததால் சேவிங் லோஷனை குடித்த நண்பர்கள்.. இருவர் உயிரிழப்பு!

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது பெருகி வரும் நிலையில், பல பகுதிகளில் உள்ள குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் திணறி வருகின்றனர். மது இல்லாமல் முடங்கி கிடக்கும் குடிமகன்கள், டாஸ்மாக் கடைகளுள் புகுந்து திருடும் அளவிற்கு வந்து விட்டது.

ttn

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த அன்வர்ராஜா (33) என்பவரின் நண்பர்கள் அருண்பாண்டி (27) மற்றும் அசன்மைதீன்(35). இவர்கள் இரண்டு பேரும் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் மூன்று பேரும் வழக்கமாக மது அருந்துவது போல நேற்றும் குடித்துள்ளனர்.

ttn

ஆனால், இவர்கள் மதுபானம் கிடைக்காததால் சேவிங் செய்த பிறகு முகத்தில் தடவும் லோஷனை சோடாவுடன் கலந்து குடித்துள்ளனர். அதனை குடித்த உடனே மூன்று பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்படவே அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனிடிடையே அருண் பாண்டியும், அசன்மைதீனும் உயிரிழந்துள்ளனர். மேலும், அன்வர்ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த கோட்டைப்பட்டினம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.