மது ஆலையின் எண்ணிக்கையை அதிகரித்த தி.மு.க! – தமிழக அரசை தூக்கிப்பிடிக்கும் ராமதாஸ்

மது ஆலையின் எண்ணிக்கையை அதிகரித்த தி.மு.க! – தமிழக அரசை தூக்கிப்பிடிக்கும் ராமதாஸ்

தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் அறிக்கையை விமர்சிக்கும் வகையில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்வீட் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் மது ஆலைகளை மூடுவதாக 2016ல் தி.மு.க வாக்குறுதி அளித்த நிலையில் தி.மு.க-வினர் நடத்தும்  மது ஆலைகளின் எண்ணிக்கை மேலும் ஒன்று அதிகரித்துள்ளது என்று டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.  
தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் அறிக்கையை விமர்சிக்கும் வகையில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்வீட் வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழகத்தில் மூடப்பட்ட 400 மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர மதுக்கடைகளை திறப்பது அல்ல!

தமிழகத்தில் மதுக்கடை எண்ணிக்கை கூடி விட்டது. படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பு என்ன ஆனது? மு.க.ஸ்டாலின்- சரி தான். அதேபோல திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் எண்ணிக்கையும் ஒன்று கூடிவிட்டது. மது ஆலைகளை மூடுவதாக  2016-ல் திமுக அளித்த வாக்குறுதி என்னவானது என்பதையும் கேளுங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.