மதுரை ஆவின் சேர்மேனாக ஓ.ராஜா பதவியேற்பு: அதிமுக பெருந்தலைகள் ஆப்சண்ட்!

 

மதுரை ஆவின் சேர்மேனாக ஓ.ராஜா பதவியேற்பு: அதிமுக பெருந்தலைகள் ஆப்சண்ட்!

பல்வேறு சர்ச்சைகளை கடந்து மதுரை மாவட்ட ஆவின் சேர்மானாக ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை: பல்வேறு சர்ச்சைகளை கடந்து மதுரை மாவட்ட ஆவின் சேர்மானாக ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் பதவிக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் சகோதரர் ஓ.ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓ.ராஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போது, அவருடன் அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ ஆகியோர் உடனிருந்தனர். 

ops eps

இந்த வெற்றியை ஓ.ராஜா முழுவதுமாக கொண்டாடி முடிப்பதற்குள், அடுத்த சில மணி நேரங்களில் அதிமுகவில் இருந்து ஓ.ராஜா அதிரடியாக நீக்கப்பட்டார். அதற்கு காரணமாக, ஆவின் தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து ஓ.ராஜா போட்டியிட்டதாகவும், டிடிவி தினகரனுடன் ரகசிய கூட்டணி அமைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

அண்ணன் ஓ.பி.எஸ்ஸும் கை விட்டுவிட்டார், டிடிவியும் ஊழல்வாதிகளுக்கு அமமுகவில் இடமில்லை என ஷட்டரை சாத்திவிட்டார், திமுகவிற்குள் சேர்க்க வாய்ப்பே இல்லை, ஓ.ராஜாவின் அரசியல் எதிர்காலம் அஸ்தமனமானதாக பத்திரிகைகள் எழுதத் தொடங்கின.

o raja

அதன்பின், அடுத்த இரண்டு தினங்களில், ஓ.ராஜா பகிரங்கமாக மன்னிப்பு கோரியதாகவும், அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதாகவும் அதிமுக தலைமை அறிவித்தது.

இந்நிலையில், மதுரை ஆவின் அலுவலகத்தில் இன்று எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், ஆவின் பெருந்தலைவராக ஓ.ராஜா பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் தலைவராக வெற்றி பெற்ற அன்று, அமைச்சர், எம்.எல்.ஏ என பெரும் தலைகள் உடனிருந்த நிலையில், இன்று நடைபெற்ற விழாவில் அதிமுக பெருந்தலைகள் ஆப்சண்ட் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.