மதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90%தேர்ச்சி பெற்றது இவர்கள் தானாம்!

 

மதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90%தேர்ச்சி பெற்றது இவர்கள் தானாம்!

நாடுமுழுவதும் 62,907 ரயில்வே காலிப்பணியிடங்களுக்கான குரூப் டி தேர்வு கடந்த ஆண்டு மதுரையில் நடைபெற்றது

மதுரை: ரயில்வே பணியிடங்களில் வெளிமாநிலத்தவருக்கு அதிகம்  இடம் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாடுமுழுவதும் 62,907 ரயில்வே காலிப்பணியிடங்களுக்கான குரூப் டி தேர்வு கடந்த ஆண்டு மதுரையில் நடைபெற்றது.  இந்நிலையில்  ரயில்வே தேர்வில் தேர்வானவர்களில் 90 சதவிகிதம் பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த தேர்வுகள் மூலம் 572 பணியிடங்கள் நிரப்பப்பட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 10க்கு குறைவானவர்களுக்கே இடம் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

exam

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரயில்வே துறை, தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த தேர்வில் அதிகம் பங்கேற்கவில்லை. அதனால் தான் தேர்ச்சி  பெறவில்லை என்று கூறியுள்ளனர். 

இந்த விளக்கமானது ஏற்கும்படியாக இல்லை என்று கூறும் சிலர் வடமாநிலத்திலும் சரி, தமிழகத்திலும்  நடக்கும் பெரும்பாலான தேர்வுகளில் வெளிமாநிலத்தவர்களே தேர்வு பெற்றால் தமிழர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.