மதுரையில் காய்கறி சந்தை, மளிகைக்கடைகள் செயல்படத் தடை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

 

மதுரையில் காய்கறி சந்தை, மளிகைக்கடைகள் செயல்படத் தடை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுனர்களுடன் அரசு ஆலோசனை மேற்கொண்டது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழக அரசு பல்வேறு  கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது.  கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத வண்ணம் தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுனர்களுடன் அரசு ஆலோசனை மேற்கொண்டது. 

ttn

அதில், நகர்ப்புறங்களில் ஊரடங்கை கடுமையாக்கினால் தான் கொரோனவை தடுக்க முடியும் என்று முடிவெடுக்கப்பட்டதால், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் 28 ஆம் தேதி வரை ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. அதே போல, சேலம் மற்றும் திருப்பூரிலும் ஊரடங்கு கடுமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரையில் முழு ஊரடங்கு காலத்தில் தற்காலிக காய்கறி சந்தை, மளிகைக்கடைகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவு பழக்கடைகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள் செயல்படவும் தடை எனவும் மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார்.