மதுமிதா விவகாரம்: விளையாட்டாக இருந்தாலும் போலீஸ் விசாரணை தேவை! எஸ்.வி. சேகர் கருத்து  

 

மதுமிதா விவகாரம்: விளையாட்டாக இருந்தாலும் போலீஸ் விசாரணை தேவை! எஸ்.வி. சேகர் கருத்து  

மதுமிதா தற்கொலை விவகாரத்தில் போலீஸ் விசாரணை தேவை என்று எஸ்.வி. சேகர் கூறியுள்ளார். 

மதுமிதா விவகாரம்: விளையாட்டாக இருந்தாலும் போலீஸ் விசாரணை தேவை! எஸ்.வி. சேகர் கருத்து  

சென்னை: மதுமிதா தற்கொலை விவகாரத்தில் போலீஸ் விசாரணை தேவை என்று எஸ்.வி. சேகர் கூறியுள்ளார். 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் 50 நாட்களை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. இதில் ஆரம்பத்தில் தமிழ் பொண்ணு என்று அதிரடி காட்டிய மதுமிதா, வனிதாவுக்கு எதிராக சரிசமமாக நின்று ரசிகர்களைக் கவர்ந்தார். ஆரம்பத்தில் யாருடனும் ஒத்துப்போகாமலிருந்த மது நாளடைவில் பாசமாக இருந்து அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். 

நன்றாகச் சென்று கொண்டு இருந்த குடும்பத்தில் நாரதர் வனிதா என்ட்ரி கொடுத்த பின்பு பிக் பாஸ் வீடு  சந்தை கடை போல் மாறியது. அதைப்புரிந்து கொள்ளாத மது வனிதா பேச்சை கேட்டு ஆண்கள் அணியை எதிர்த்துக் கேள்வி கேட்டார். இது ஒரு பக்கம் இருக்கக் கடந்த சனிக்கிழமை பிக் பாஸ் வீட்டை மது அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அவர் ஏன் வெளியேற்றப்பட்டார் என்று காரணம் தெரியாமல் அவரது ரசிகர்கள் மிகுந்த குழப்பத்திலிருந்தனர். 

பிறகு அவர் ஏன் வெளியேற்றப்பட்டார்? என்பது குறித்து தகவல் வெளியானது. ஹெலோ டாஸ்க் சமயத்தில் மதுமிதா, ‘வர்ண பகவான் கர்நாடக காரர் போல அங்கு பெய்த மழை இங்க பெய்திருந்தால் நல்லா இருந்திருக்கும்’ என்று பேசியுள்ளார். இதை கேட்ட ஷெரின் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் அதற்கு மறுப்பு தெரிவிக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் பெரிதாகியுள்ளது.  அப்போது தனது பக்கம் உள்ள நியாயத்தை நிரூபிக்க மது தனது கையை அறுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் மது தன்னைத் தானே தாக்கிக் கொண்டதால் அவர் வெளியேற்றப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது எஸ்.வி. சேகர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது தவறு என கூறி அவரை வெளியே அனுப்பியவர்களுக்கு, மதுமிதாவை தற்கொலைக்குத் தூண்டியவர் யார் என கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா⁉️ஏன் 60 காமிரால சில வேலை செய்யவில்லையா. இது விளையாட்டுத் தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை’ என்று கூறியுள்ளார்.