மதுபாட்டிலில் மிதந்த தவளை : அதிர்ச்சியில் உறைந்த “குடி”மகன்கள்!

 

மதுபாட்டிலில் மிதந்த தவளை : அதிர்ச்சியில் உறைந்த “குடி”மகன்கள்!

45 நாட்களுக்கு பிறகு நேற்றுமுன்தினம் மதுக்கடை திறக்கப்பட்டது. இதனால்  குடிமகன்கள் ஆர்வமாக மதுவாங்கி சென்றனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் அரசு மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. ஊரடங்கால் கிட்டதட்ட 45 நாட்களுக்கு பிறகு நேற்றுமுன்தினம் மதுக்கடை திறக்கப்பட்டது. இதனால்  குடிமகன்கள் ஆர்வமாக மதுவாங்கி சென்றனர். 

tt

அந்த வகையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மதுபாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் அதை எடுத்துக்கொண்டு வயல் பகுதிக்கு சென்று அந்த பாட்டிலை திறந்து பாதி மதுவை கப்பில் ஊற்றிவிட்டு மீண்டும் பாட்டிலை மூடும்போது பாட்டிலின் உள்ளே ஏதோ கிடந்துள்ளதை கவனித்துள்ளார்.  உள்ளே தவளை ஒன்று கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து மதுபான கடைக்கு தகவல் கொடுக்க, அவர்களோ தவறை மறைக்க, பழைய பாட்டிலை பெற்றுக்கொண்டு புது பாட்டிலை கொடுத்துள்ளனர்.  

tt

இதுகுறித்து கூறியுள்ள நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அம்பிகாபதி, ரம் போன்ற மது வகைகளில், நிறுவனங்களில் இருந்து வரும்போது தவறு நடந்திருக்கலாம். எனவே இனிவரும் காலங்களில் மதுபாட்டில்களையும் நன்கு பரிசோதித்தே வழங்க ஊழியர்களை அறிவுறுத்துவோம் என்று கூறியதாக தெரிகிறது.