மண்ணுக்குள் இன்னொரு மதுரை இருக்கிறது! கீழடி அழிந்தது எப்படி தெரியுமா?

 

மண்ணுக்குள் இன்னொரு மதுரை இருக்கிறது! கீழடி அழிந்தது எப்படி தெரியுமா?

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் போகும் சாலையில்,கீழடி தாண்டி.17 வது கிலோ மீட்டரில் ரயில் பாதைக்கு, கீழ்பாலம் கட்டும் பனி நடந்துகொண்டிருக்கிறது. கடந்த ஜனவரியில் அந்தப் பனி ஆரம்பித்தபோது பெரும் ஜே.சி.பி இயந்திரங்கள் கொண்டு மண்ணை அகழ்ந்தார்கள்.

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் போகும் சாலையில்,கீழடி தாண்டி.17 வது கிலோ மீட்டரில் ரயில் பாதைக்கு, கீழ்பாலம் கட்டும் பனி நடந்துகொண்டிருக்கிறது. கடந்த ஜனவரியில் அந்தப் பனி ஆரம்பித்தபோது பெரும் ஜே.சி.பி இயந்திரங்கள் கொண்டு மண்ணை அகழ்ந்தார்கள்.

கீழடி

அப்போது பத்தடி ஆழத்தில் ஒரு செங்கல் கட்டுமானம் இருப்பது தெரிய வந்தது. கீழடியின் தொடர்ச்சியாக அது இருக்கலாம். அல்லது அது கீழடி நகரின் வெளிப்புற அரணாக இருக்கலாம். இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கீழடி சுட்டுவது என்ன?

அங்கே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நகர நாகரீகம் இருந்திருக்கிறது. அதில் வீடுகளும், தொழிற்சாலைகளும், ஏன் கழிவரைகள் கூட கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இதுவரை எந்தவித மதச்சின்னங்களோ, கடவுள் சிலைகளோ கோவில்களோ கண்டுபிடிக்கப் படவில்லை அதனால், சங்ககாலத்த்துக்கு முந்திய தமிழர்களின் வாழ்க்கை முறை இன்றைய இந்திய அல்லது இந்து தமிழர்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்திருக்கிறது என்பது கிட்டத்தட்ட நிறுவப்பட்டு விட்டது.

கீழடி

இப்போது கீழடி ஏன் அழிந்தது என்பது குறித்த ஆய்வுகள் தொடங்கி இருக்கின்றன. திருவிளையாடல் புராணம்,மதுரை திருப்பரங்குன்றத்துக்கு கிழக்கில் உள்ளதாகத்தான் சொல்கிறது.அது கீழடிதான். கீழடி அழிந்த பிறகுதான் இன்றைய மதுரை உருவாக்கப்பட்டது. என்கிற கருதுகோள் வலிமை பெற்று வருகிறது.

இலக்கியச் சான்றுகளின்படி கீர்த்திபூசனன் என்கிற மன்னன் மதுரையை ஆண்டகாலத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் வங்கக்கடல் பொங்கி வைகையாற்றின் வழியாக மதுரை வரை வந்திருக்கிறது.

கீழடி

மதுரையை சுற்றியுள்ள மலைகளில் யானை மலையும் திருப்பறங்குன்றமும் கடும் பாறைகள். அதிலும் ஆனைமலை ஒற்றை நெடுங்கல். ஆனால் நாகமலையும், பழமுதிர்ச் சோலையும் மணற்குன்றுகள். இவை எப்படித் தோன்றின. ஆறுகளை  மழைக்காலத்தில் தோன்றும் வெள்ளம் வடிந்த பிறகு பார்த்திருக்கிறீர்களா.

நாணல் புதர்கள், முட்செடிகள் இருந்த இடங்களில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட குப்பைகள் மண் ஆகியவை தேங்கி சிறிய மணல் திட்டுக்கள் உருவாகி இருக்கும். அதேபோல ஆழிப்பேரலை உருவான போது கடலில் இருந்து அடித்துவரப்பட்ட கசடுகளையும், சகதியையும் இங்கிருந்த காட்டுப் பகுதிகள் தடுத்திருக்கலாம்.

கீழடி

அதனால் தேங்கிய மண்ணும் சகதியும் இத்தனை ஆண்டுகாலத்தில் இறுகி உறுதிப்பட்டு மலைகளாகி இருக்கலாம் என்று கருதுகிறார்கள். இதற்கு திருவாப்புடையார் கோவில் தலபுராணம் ஒரு சான்றை தருகிறது. ஆழிப்பேரலை வந்த போது இங்கிருந்த ஒரு ஆலமரம் எதிர்த்து நின்றதாகவும், சுனாமியால் அதை அசைக்க முடியவில்லை. அது பூமியில் அடிக்கப்பட்ட ஆப்பு போல நின்றதால்தான் அந்த கோவிலுக்கே திருவாப்புடையார் கோவில் என்று பெயர் வந்ததாகவும் ஊரும் திருவாப்பனூர் ஆனதாகச் சொல்கிறார்கள்.

திருவாப்புடையார்

சுனாமியை எதிர்த்து நின்றதால் திருப்பரங்குன்றத்தின் மேற்குப்பகுதியிலும் இத்தகைய மண் படிமங்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஆழிப்பேரலை வடிந்த போது மீண்டும் பின்னோக்கி அடித்துக்கொண்டுபோய்ச் சேர்த்த பொருட்கள் எல்லாம் வைகையின் முகத்துவாரத்தில் மணற்குன்றாக குவிந்து கிடக்கிறது. இதை முகவை என்றும் சேதுக்கரை என்றும் அழைக்கிறார்கள்.

இந்த மணற்குன்றுமுதல் நாகமலை மணற்குன்றுவரை ஆய்வு செய்தால் தமிழரின் தொல் நாகரீகம் பற்றிய பல செய்திகள் கிடைக்கும்!