மண்ணில் மறைந்தாலும் பிரபஞ்சத்தில் வாழ்வார் எழுத்தாளர் பிரபஞ்சன்

 

மண்ணில் மறைந்தாலும் பிரபஞ்சத்தில் வாழ்வார் எழுத்தாளர் பிரபஞ்சன்

தமிழகத்தின் முக்கிய எழுத்தாளரான பிரபஞ்சன் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

புதுச்சேரி: தமிழகத்தின் முக்கிய எழுத்தாளரான பிரபஞ்சன் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

தமிழக எழுத்தாளர்களில் முக்கியமானவர் பிரபஞ்சன். இவர் புதுச்சேரியில் கடந்த 1945-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி பிறந்தார். ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் போன்ற பத்திரிகைகள் மூலம் தனது எழுத்துப்பணியை தொடங்கிய அவர் காலப்போக்கில் இலக்கிய உலகில் ஆளுமை மிக்க எழுத்தாளரானார். இவர் ஏராளமான சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார். தனது ”வானம் வசப்படும்” என்ற நாவலுக்காக கடந்த 1995-ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றார். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான கதைகளை அவர் எழுதியுள்ளார். 

இந்நிலையில், சமீபகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் புதுச்சேரியில் இன்று காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு ஆகும்.