மண்டை ஓடாக மாற விரும்பும் இளைஞர்: காது மூக்கை தொடர்ந்து பிறப்பிறுப்பையும் அறுத்து கொள்ள முடிவு!

 

மண்டை ஓடாக மாற விரும்பும் இளைஞர்: காது மூக்கை தொடர்ந்து பிறப்பிறுப்பையும் அறுத்து கொள்ள முடிவு!

மண்டை ஓடு போல தோற்றம் பெறுவதற்காக மூக்கு, காது ஆகிய உறுப்புகளை அறுத்துக்கொண்ட இளைஞர் அடுத்ததாகத் தனது பிறப்புறுப்பையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியா: மண்டை ஓடு போல தோற்றம் பெறுவதற்காக மூக்கு, காது ஆகிய உறுப்புகளை அறுத்துக்கொண்ட இளைஞர் அடுத்ததாகத் தனது பிறப்புறுப்பையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவைச் சேர்ந்தவர்  22 வயதான எரிக் ராமிரெஸ்.  தனது 12-வயதில் தாயை இழந்த எரிக், அதன் பின்னர் உடல் முழுவதும் விதவிதமாக டாட்டூ வரைந்து கொண்டார். பின்னர் மனித மண்டை ஓடு போல தனது முகத்தை மாற்ற வேண்டும் என விரும்பி, மூக்கு மற்றும் இரண்டு காதுகளை அறுத்து எடுத்துள்ளார். மண்டை ஓட்டின் வாய் பகுதியில் பற்கள் வெளிப்படையாக இருப்பது போல தனது வாயைச் சுற்றிலும் அதற்கேற்ப டாட்டூ போட்டுக்கொண்ட எரிக், விரைவில் தனது பிறப்புறுப்பையும் நீக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.

திருமணமாகி குழந்தைக்கு தந்தையாக உள்ள  எரிக் ராமிரெஸ் இது பற்றி கூறும் போது, ‘என்னைப் பார்த்து பயப்படுபவர்களைக் காணும் போது சிரிப்பாக இருக்கும். என்னுடைய தோற்றம்தான் மாறுபட்டுள்ளதே தவிர, நானும்  சாதாரணமானவன்’ என்று தெரிவித்துள்ளார்.