மங்களூரு கலவரம்: மகளின் கண் முன்பாக சரிந்த தந்தை!

 

மங்களூரு கலவரம்: மகளின் கண் முன்பாக சரிந்த தந்தை!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்த போராட்டத்தில் சம்பந்தமே இல்லாத இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் மங்களூருவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடந்தது. இதில், வன்முறை ஏற்படவே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஜலீல் (42), நவ்ஷின் (23) என இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் இருவருமே போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்த போராட்டத்தில் சம்பந்தமே இல்லாத இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் மங்களூருவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடந்தது. இதில், வன்முறை ஏற்படவே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஜலீல் (42), நவ்ஷின் (23) என இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் இருவருமே போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜலீல் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று கலவரம் காரணமாக ஜலீலின் குழந்தைகளை அழைத்துவந்த வாகனத்தால் வீட்டின் அருகே இறக்கிவிட முடியவில்லை. இதனால், குழந்தைகளை அழைத்துவர ஜலீல் சென்றுள்ளார். குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்தபோது, திடீரென்று ஜலீல் சரிந்து விழுந்துள்ளார். அவரது கண்ணில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் கண்ணில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. இது குறித்து அவரது மகள் ஷிஃபானி கூறுகையில், “என்னுடைய கண்ணுக்கு முன்பாகவே என்னுடைய தந்தையை கொன்றுவிட்டார்கள்” என்று அழுதுகொண்டே கூறிவருகிறார். உடன் அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோல், மற்றொருவரான நவ்ஷின் வெல்டிங் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார். அன்று கலவரமாக உள்ளது என்று கூறி சீக்கிரம் வீட்டுக்குச் செல்லும்படி அவரது முதலாளி கூறியுள்ளார். அதனால், நவ்ஷின் வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது, திடீரென்று அவர் சுருண்டு விழவே அருகில் இருந்தவர்கள் என்ன ஏது என்று பார்த்துள்ளனர். அவரது உடலில் குண்டு பாய்ந்து ரத்தம் வரவே, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவரும் இறந்துவிட்டார்.

police-beat-one-in-caa-protet

இது குறித்து நவ்ஷின் சகோதரர் கூறுகையில், “நவ்ஷின் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. என்ன நடந்தது என்று போலீசார் எதுவும் கூறவில்லை. ஆனால், சம்பவத்தைப் பார்த்தவர்கள்தான் என்னிடம் விவரித்தார்கள். நவ்ஷினை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக முதலில் தகவல் வந்தது. இந்த பகுதியில் நிறைய நவ்ஷின்கள் உள்ளதால் யாரை சொல்கிறார்கள் என்பது முதலில் எனக்குத் தெரியவில்லை. பிறகு, என்னுடைய சகோதரனைக் காணாமல் ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது போலீசார் என்னை அனுமதிக்கவில்லை. அவன் நலமாக உள்ளான், லேசான காயம்தான் என்று கூறி திருப்பி அனுப்பவே முயன்றார்கள். கடைசியில் அவன் இறந்துவிட்டான் என்றார்கள். இந்த கொலைக்கு எல்லாம் மங்களூரு ஆணையர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் போராட்டத்தில் பங்கேற்காதவர்களாக, போராட்டத்தை வேடிக்கை பார்த்தவர்களாகவே உள்ளனர். கலவரம் என்றால் முட்டிக்கு கீழே சுட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், இதுபோன்ற போராட்டங்களில் எல்லாம் தலையை குறிவைத்ததே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தாமல் உயிரைப் பறிக்கும் குண்டுகளை வைத்து சுடுவது ஏன் என்ற கேள்வியை இந்த சம்பவங்கள் எழுப்பி வருகின்றன.