மக்கிப்போன சரக்கு என்று விமர்சித்த அன்புமணி… தாவுவதே பிழைப்பு என்று பதிலடி கொடுத்த செந்தில் குமார் எம்.பி!

மக்கிப்போன சரக்கு என்று விமர்சித்த அன்புமணி… தாவுவதே பிழைப்பு என்று பதிலடி கொடுத்த செந்தில் குமார் எம்.பி!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பா.ம.க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தி.மு.க-வை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். தி.மு.க பிரஷாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பதை வைத்து தி.மு.க-விடம் உள்ள சரக்கு மக்கிப்போன சரக்கு, மக்குகின்ற சரக்கு என்று கூறியிருந்தார். இதை அக்கட்சியின் வழக்கறிஞர் கே.பாலு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

தி.மு.க மக்கிப்போன சரக்கு, மக்குகின்ற சரக்கு என்று அன்புமணி விமர்சனம் செய்திருந்ததற்குப் பதிலடியாக அன்புமணி ராமதாசுக்கு எப்போதுமே தாவுவது எல்லாம் பிழைப்பா என்று தர்மபுரி எம்.பி செந்தில் குமார் விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பா.ம.க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தி.மு.க-வை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். தி.மு.க பிரஷாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பதை வைத்து தி.மு.க-விடம் உள்ள சரக்கு மக்கிப்போன சரக்கு, மக்குகின்ற சரக்கு என்று கூறியிருந்தார். இதை அக்கட்சியின் வழக்கறிஞர் கே.பாலு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

senthilkumar-mp

இதற்கு தி.மு.க எம்.பி டாக்டர் செந்தில் குமார் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு கட்டிக் கதை சொல்லட்டுமா… சிலர் ஒரு கடைக்கு சென்று நன்றாக சாப்பிட்டுவிட்டு, கடைக்காரரிடமே பணம் கேட்டு, கடைக்காரர் இல்லை என்றதும். சே சே மக்கிப்போன சரக்கு என்று சொல்லிவிட்டு, பக்கத்து கடைக்கு சென்று சரக்கு அடித்து, அதுவே ஒரு பொழப்புன்னு… இதுக்கு பேரு என்ன தெரியுமா?” என்று கூறியுள்ளார்.

அதாவது, தி.மு.க-விடம் கூட்டணிக்கு முயன்று தோல்வியுற்று, வேறு அணிக்குச் சென்று என்று அணி தாவிக்கொண்டே இருக்கும் பா.ம.க… இதெல்லாம் ஒரு பிழைப்பா என்ற பரிகாசம் செய்துள்ளார். இதற்கு தி.மு.க-வினர் வரவேற்றும் பா.ம.க-வினர் விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர்.