மக்கள் நீதி மய்யம் வென்ற வெள்ளி பதக்கம்: பெருமை கொள்ளும் கமல் ஹாசன்

 

மக்கள் நீதி மய்யம் வென்ற வெள்ளி பதக்கம்: பெருமை கொள்ளும் கமல் ஹாசன்

இந்தியாவின் சிறந்த செயலிக்கான வெள்ளிப் பதக்கத்தை கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின், மய்யம் விசில் பெற்றுள்ளது.

சென்னை: இந்தியாவின் சிறந்த செயலிக்கான வெள்ளிப் பதக்கத்தை கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின், மய்யம் விசில் பெற்றுள்ளது.

அரசியலில் களமிறங்கிய   நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி என்ற கட்சியை துவங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் வசிக்கும் பகுதிகளில் நடக்கும் தவறுகளையும், பிரச்சினைகளையும் பதிவு செய்யும்  செயலியான  ‘மய்யம் விசில்’ ஆப் என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.  அப்போது பேசிய கமல் ஹாசன், ”மய்யம் விசில் ஆப் பிரச்சினைகளை தீர்க்கும் மந்திர கோல் அல்ல. இது காவல்துறைக்கு உதவும், விமர்சனம் செய்யக்கூடியதாகவும் இருக்கும். காவல்துறைக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ இது மாற்று அல்ல” என்றும் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் ‘மய்யம் விசில்’ செயலிக்கு ‘மொபைல் மார்க்கெட்டிங் அசோசியேஷன்’ என்ற அமைப்பு இந்தியாவின் சிறந்த செயலிக்கான வெள்ளிப் பதக்கம் வழங்கியுள்ளது.  இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல் ஹாசன், “ஒரு அரசியல் கட்சியாக இதுவரை யாருக்கும் கிடைத்திராத அங்கீகாரம். மக்கள் பிரச்சினைகளை கருத்துடன் அணுகி, அதைத் தீர்ப்பதற்கு ‘மய்யம் விசில்’ செயலியைப் பயன்படுத்தி, இவ்விருதுகள் தமிழ்நாட்டிற்குக் கிடைத்திடக் காரணமாகிய எங்கள் களவீரர்களுக்கும், கள வீராங்கனைகளுக்கும் நன்றி’” என்று பதிவிட்டுள்ளார்.