மக்கள் நீதி மய்யம் கட்சியில் 6 புதிய பொதுச்செயலாளர்கள்: கமல் ஹாசன் அறிவிப்பு!

 

மக்கள் நீதி மய்யம் கட்சியில் 6 புதிய பொதுச்செயலாளர்கள்: கமல் ஹாசன் அறிவிப்பு!

மக்கள் நீதி மய்யம் கட்சி யில் 6 புதிய பொதுச்செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் 6 புதிய பொதுச்செயலாளர்கள்: கமல் ஹாசன் அறிவிப்பு!

சென்னை:  மக்கள் நீதி மய்யம் கட்சியில் 6 புதிய பொதுச்செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கடந்த மக்களவை தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்றது. இதையடுத்து கட்சியினை அடுத்த கட்ட வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல கமல் ஹாசன் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

maiam

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம்  சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசியல் மக்கள் நலனை விட்டு விலகியும், சுயநலம் மிக்கதாகவும், தரம் தாழ்ந்தும், தன் பாரம்பரிய பெருமைகளை இழந்து நின்ற ஒரு சூழலில், அரசியல் நாகரீகத்தை மீட்டெடுக்கவும், மீண்டும் மக்களுக்காகப் பாடுபடும் ஒரு அரசியல் கட்சியினை உருவாக்கிட வேண்டும் என்கின்ற எண்ணத்திலும், என்னால் ஆரம்பிக்கப்பட்டது தான் மக்கள் நீதி மய்யம் கட்சி அதன் காரணமாகவே நமது கட்சி, ஆரம்பித்த 14 மாதத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலை துணிவுடன் சந்தித்தது. அனைத்துத் தரப்பினரும் ஒத்துக்கொள்ளும் வகையிலான பெரும் ஆதரவை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்கள் அளித்தனர். 

kamal

அந்த ஆதரவை மேலும் அதிகப்படுத்தி, வரும் 2021ல் மக்கள் நலன் விரும்பும் ஒரு நல்லாட்சி அமைத்திட, உத்வேகத்துடன் பாடுபடுவதென்று முடிவு செய்து, நமது கட்சியை வலுப்படுத்தும் சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு விரும்பினேன். தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரையும், கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் நேரடியாக சந்திக்கும் வண்ணம் கட்சி நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு செய்தேன். அந்த வகையில் நமது கட்சி, தலைவரின் கீழ் துணைத்தலைவர், ஆறு பொதுச்செயலாளர்கள் மற்றும் பொருளாளர் இருக்கும் வண்ணம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் வரை சென்றடையப் பொதுச்செயலாளர் அமைப்பு – வடக்கு மற்றும் கிழக்கு & தெற்கு மற்றும் மேற்கு என்று இரண்டு பதவிகளாக உருவாக்கப்படுகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச்சாவடி வரை சென்றடையப் பொதுச்செயலாளர் – ஒருங்கிணைப்பு என்கின்ற பதவி உருவாக்கப்படுகிறது. 

இத்துடன் பொதுச்செயலாளர் – கொள்கை பரப்பு, பொதுச்செயலாளர் – சார்பு அணிகள், பொதுச்செயலாளர் – தலைவர் அலுவலகம் என்றும் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் தமிழகம் முழுக்க கட்சி நிர்வாகத்தினை எளிமைப்படுத்திடும் வகையில், சென்னை , காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி என்று 8 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கு அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவில் 16 மாநிலச் செயலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். 
புதிதாக நியமிக்கப்படும் மாநிலச் செயலாளர்கள் அந்தந்த மண்டலத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்’ என்று  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பு பதவிக்கு அருணாச்சலம், பொதுச்செயலாளர் அமைப்பு பதவிக்கு மெளரியா, மற்றொரு பொதுச்செயலாளர் அமைப்பு பதவியை தலைவர் அலுவலகத்தின் நேரடிப் பார்வை கவனிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொதுச்செயலாளர் கொள்கை பரப்பு பதவிக்கு ரங்கராஜன், பொதுச்செயலாளர் சார்பு அணிகள் பதவிக்கு உமா தேவி மற்றும் பொதுச் செயலாளர் தலைவர் அலுவலகம் பதவிக்கு பஷீர் அகமது ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.