மக்கள் நடுரோட்ல நின்னு மூணு வருஷமாச்சு…ட்ரெண்டாகும் மோடி!

 

மக்கள் நடுரோட்ல நின்னு மூணு வருஷமாச்சு…ட்ரெண்டாகும் மோடி!

தமிழகத்தில் தாமரையை மலர செய்தே தீருவேன் என்று ஒவ்வொரு மேடையிலும் சபதம் போட்டுக் கொண்டிருந்த தமிழிசை கவர்னராகி தமிழகத்தை மறந்து விட்டார். ஆனால், பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பை அத்தனை சீக்கிரத்தில் தமிழர்கள் மறக்க மாட்டார்கள் போல…  பிரதமர் நரேந்திர மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து இன்றோடு 3 வருஷங்கள் முழுசாய் முடிஞ்சிடுச்சு. ஆமாம்… கடந்த 2016ம் ஆண்டு இதே நாளில் தான் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டார். அந்த இரவுகளில் தமிழகத்தின் தெருக்களில் எல்லாம் கூட்டம் அலைமோதியது.

1000rs

கையிருப்பு பணத்தை எல்லாம் எப்படி மாற்றுவது என்று கொஞ்சம் அதிக பணம் வைத்திருப்பவர்கள் நகைக்கடைகளில் முண்டியடித்தார்கள். அடுத்த நாள் தமிழகம் முழுக்கவே ஏடிஎம் இயந்திரங்களின் எதிரே கோயில் பிரசாதம் வாங்க நிற்கிற கூட்டத்தைப் போல வாழ்க்கைக்கான பிரசாதம் பெறுகிற வகையில், தங்களது சொந்த சேமிப்பு பணத்தை எடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள் மக்கள். 

money

மோடியின் இந்த அறிவிப்பால், கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்களுக்கு தங்களது சேமிப்பு பணத்தைக் கூட எடுக்க வழியின்றி தவித்தார்கள் பொதுமக்கள். மணிக்கணக்கில் ஏடிஎம் வாசல்களில் காத்திருந்ததால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிக்கப்படுவதோடு, கள்ளநோட்டு புழக்கமும் தடுக்கப்படும் என்ற பிரதமர், பயங்கரவாதிகளுக்கு பணம் செல்லுவது தடுக்கப்படுவதோடு இந்திய பொருளாதாரமும் உயர்த்தப்படும் என்றார்.

modi

நாட்டின் எதிர்காலம் கருதி மக்கள் சிரமங்களை 50 நாட்களுக்கு பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தனது உரையாடலில் கேட்டுக் கொண்டார். வருஷம் மூணு ஆச்சு… இன்னும் விடிஞ்சபாடில்லை என்று இப்போதும் குரல்களைக் கேட்க முடிகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாது என அறிவிக்கப்பட்ட 99.3 விழுக்காடு பணம் ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வந்து விட்டதில், திட்டம் படுதோல்வி என்கிறார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநிலச் செயலர் சி.பி.கிருஷ்ணன்.  

modi

3 வருடங்களைக் கடந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் இது குறித்து எல்லோரும் பதிவு செய்து வருகின்றனர்.