மக்கள் கூடுவதை மற்றும் தீவிரவாத அமைப்புகளின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு செக் வைத்த காஷ்மீர் நிர்வாகம்…. கொல்லப்படும் தீவிரவாதிகளின் உடலை நிர்வாகமே அடக்கம் செய்ய தொடங்கியது….

 

மக்கள் கூடுவதை மற்றும் தீவிரவாத அமைப்புகளின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு செக் வைத்த காஷ்மீர் நிர்வாகம்…. கொல்லப்படும் தீவிரவாதிகளின் உடலை நிர்வாகமே அடக்கம் செய்ய தொடங்கியது….

ஜம்மு அண்டு காஷ்மீரில் என்கவுண்டரில் கொல்லப்படும் தீவிரவாதிகளின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசு நிர்வாகமே அடக்கம் செய்ய தொடங்கியுள்ளது. இதன் மூலம் தீவிரவாத அமைப்புகளின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு அரசுக்கு செக் வைத்துள்ளது.

ஜம்மு அண்டு காஷ்மீர்  யூனியன் பிரதேசத்தில் பாரமுல்லா மாவட்டம் சோப்பூர் பகுதியில் இந்த மாதம் தொடக்கத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி சஜாத் நவாப் தர் என்பவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட தீவிரவாதியின் இறுதி இறுதி சடங்கு பிரார்த்தனையில் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பேர் கலந்து கொண்டனர். லாக்டவுன் விதிமுறைகளை மீறி மக்கள் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

கொல்லப்பட்ட தீவிரவாதியின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட காஷ்மீர் மக்கள் (கோப்பு படம்)

மேலும் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் மற்றும் ஐ.எஸ்.ஐ. அமைப்பு இது போன்ற மக்கள் கூட்டத்தை தங்களது இயக்கங்களுக்கு ஆட்களை சேர்க்க பயன்படுத்தி கொள்கின்றனர். இதனையடுத்து தேவையில்லாமல் மக்கள் கூட்டம் கூடுவதையும், தீவிரவாத அமைப்புகள் ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் என்கவுண்டரில் கொல்லப்படும் தீவிரவாதிகளின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் நாமே அடக்கம் செய்துவிடுவோம் என ஜம்மு அண்டு காஷ்மீர் நிர்வாகம் முடிவு செய்தது.

பாதுகாப்பு படை வீரர்கள்

அதனை செயல்படுத்தவும் தொடங்கி விட்டது. கடந்த 22ம் தேதி பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகளின் உடலை சத்தமில்லாமல் அடக்கம் செய்து விட்டது. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடலை உறவினர்களிடம் கொடுக்காமல் அரசு நிர்வாகமே அடக்கம் செய்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த 17ம் தேதி பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளின் உடலும் அதிகாரிகளால் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜம்மு அண்டு காஷ்மீர் அரசின் இந்த நடவடிக்கையால் மக்கள் தேவையில்லாமல் கூடுவதும், தீவிரவாதிகளின் ஆட்சேர்ப்பு நடவடிக்கையும் தடுக்கப்பட்டுள்ளது.