‘மக்களை சீண்டிய எடப்பாடி அரசு…’ மார்கழி மாதத்தில் வீட்டுக்கு வீடு CAA & NRC-க்கு எதிராக கோலம்!

 

‘மக்களை சீண்டிய எடப்பாடி அரசு…’  மார்கழி மாதத்தில் வீட்டுக்கு வீடு CAA & NRC-க்கு எதிராக கோலம்!

கோலம் போடுறது ஒரு குத்தமாய்யா என்று பலரும் சமூகவலைதளங்களில்  சாடி வந்தனர்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில் நேற்று    சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவிகள் கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ttn

குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான எழுத்துக்களுடன் அங்குள்ள வீடுகள் மற்றும் சாலையில் கோலம் போட்டு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தினர்.  அனுமதியின்றி கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆண்  பெண் என 8 பேர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.

ttn

கோலம் போடுறது ஒரு குத்தமாய்யா என்று பலரும் சமூகவலைதளங்களில்  சாடி வந்தனர். இந்நிலையில்  மார்கழி மாதத்திற்கு வீட்டு  வாசல்களில் கோலம் சாமானிய மக்களும் அரசின் அராஜகத்தை எதிர்த்து, வேண்டாம் CAA, NRC என கோலம் போட்டு தங்கள் எதிர்ப்பை  பதிவு செய்து வருகின்றனர்.

ttn

அதேபோல் திமுக தலைவர் முக ஸ்டாலின், கனிமொழி எம்பி என பலரும் தங்கள் வீடுகளில் CAA, NRCக்கு எதிராக கோலமிட்டுள்ளனர். 

ttn

மாணவிகள் கோலம் போட்டுவிட்டு அவர்களாகவே சென்றிருப்பார்கள். அதை விடுத்து அவர்களை கைது செய்து, சும்மா  இருந்த மக்களையும் உசுப்பேற்றி விட்டுள்ளது இந்த எடப்பாடி அரசு என்று பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.