மக்களுக்கு ஓர் இன்பமான செய்தி.. ரூ.192 குறைந்தது சிலிண்டர் விலை!

 

மக்களுக்கு ஓர் இன்பமான செய்தி.. ரூ.192 குறைந்தது சிலிண்டர் விலை!

சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மானியமில்லா சிலிண்டரின் விலை கூடும் அல்லது குறையும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் ஏற்கனவே கூறியுள்ளார். அதன்படி சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ.590க்கு விற்கப்பட்டு வந்த மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ந்து ஏற்றத்தைக் கண்டது.  

ttn

கடந்த பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்து சிலிண்டர் விலை உயிர்த்தப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து பல மாதங்களுக்கு பிறகு, கடந்த மார்ச் மாதம் சிலிண்டர் விலை ரூ.55 குறைந்து ரூ.826 க்கு விற்கப்பட்டு வந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் சிலிண்டர் விலை ரூ.65 குறைந்து ரூ.761.50 ஆக விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த மாதம் சிலிண்டர் விலை ரூ.192 குறைந்து ரூ.569.50- ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வணிக பயன்பாட்டுக்காக விற்கப்படும் மானியம் இல்லாத சிலிண்டர் விலை  ரூ.259.50 குறைந்து ரூ.1144.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.