மக்களுக்குப் புரியும் மொழி கடவுளுக்கும் புரிந்தே ஆக வேண்டும்! – கமல் ட்வீட்

மக்களுக்குப் புரியும் மொழி கடவுளுக்கும் புரிந்தே ஆக வேண்டும்! – கமல் ட்வீட்

மக்களுக்குப் புரியும் எந்த மொழியும் சர்வ வல்லமையுள்ள கடவுளுக்கும் புரிந்தே ஆக வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ட்வீட் செய்துள்ளார்.

மக்களுக்குப் புரியும் எந்த மொழியும் சர்வ வல்லமையுள்ள கடவுளுக்கும் புரிந்தே ஆக வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ட்வீட் செய்துள்ளார்.

kamal

தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தொடர்பாக கமல் இன்று ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழுக்கு உரிய மரியாதை கொடுக்க முடிவெடுத்திருப்பதை மெச்சினோம். 
மக்களுக்குப் புரியும் எந்த மொழியும், சர்வ வல்லமையுமுள்ள  கடவுளுக்கும் புரிந்தே ஆகவேண்டும்” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு தேர்வாணைய மோடி தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மற்றொரு ட்வீட்டில், “ஆட்சி அதிகாரத்தின் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் பரவியிருப்பதை இந்த “தேர்வாணைய மோசடி” பறைசாற்றுகிறது. மேலும் கீழுமாய் புரையோடியிருக்கும் ஊழலுக்கு நடுவிலே, நெஞ்சுரத்தோடு  நேர்மையை கடைப்பிடிக்கும் மிகச்சிலருக்கு… நம்பிக்கையை விடாதீர்கள். நாளை நமதே” என்று குறிப்பிட்டுள்ளார்.