மக்களின் உயிரை விட டாஸ்மாக் மூலம் வருவாய் முக்கியமா? வழக்கை நாளை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

 

மக்களின் உயிரை விட டாஸ்மாக் மூலம் வருவாய் முக்கியமா? வழக்கை நாளை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக டாஸ்மாக்கை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், உரிய கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து டாஸ்மாக் செயல்பட அனுமதி அளித்தது. ஆனால் கடந்த 8 ஆம் தேதி தொடரப்பட்ட அவசர வழக்கை விசாரித்த நீதிபதிகள் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையை டாஸ்மாக் பின்பற்றவில்லை என்று கூறி டாஸ்மாக்குகளை மூடுமாறு உத்தரவிட்டனர்.

tasmac

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, இன்னும் விசாரணைக்கு வரவில்லை. இந்த நிலையில், டாஸ்மாக் தொடர்பான அனைத்து வழக்குகளும், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் பி.என்.பிரகாஷ் ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளில் அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று  அரசுத் தரப்பில் விரிவான பதிலளிப்பதற்காக விசாரணை நாளைக்கு தள்ளிவைத்தது. டாஸ்மாக் திறப்பு வழக்கு விசாரணையின்போது, மக்களின் உயிரை விட டாஸ்மாக் மூலம் வருவாய் திரட்டுவது முக்கியமானதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

பொது அமைதி, சட்டம், ஒழுங்கு சீர்குலைந்தால் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது எனக்கூறிய உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தது. மேலும் மதுவிலக்கை நீதிமன்றம் அமல்படுத்த முடியாது. அதேசமயம், அரசியல் சாசன விதிகளை அமல்படுத்த வேண்டிய கடமை நீதிமன்றங்களுக்கு உள்ளது உண்டு என்று நீதிமன்றம் தெரீவ்த்ஹ்டது.