மக்களவை தேர்தலுக்கு முன் போர் வரும் என்று பாஜக அன்றே சொன்னது: பவன் கல்யாண்

 

மக்களவை தேர்தலுக்கு முன் போர் வரும் என்று பாஜக அன்றே சொன்னது: பவன் கல்யாண்

அமராவதி: ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், பாஜக மக்களவை தேர்தலுக்கு முன் போர் வரும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கூறியதாக தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஜன சேனா கட்சித் தலைவர் பவண் கல்யாண், பாஜக மக்களவை தேர்தலுக்கு முன் போர் வரும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கூறியதாக தெரிவித்துள்ளார். கடப்பாவில் நடைபெற்ற பேரணியில் பேசிய அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே போர் வரும் என கூறப்பட்டது. நம் நாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர், எந்த பிரச்சனைக்கும் போர் தீர்வு ஆகாது. போர் நடந்தால் இரண்டு நாடுகளும் பெரிய அளவில் பாதிக்கப்படும். தேசப்பற்று தங்களுக்கு சொந்தம் என்று பாஜக நினைத்துக் கொண்டிருக்கிறது. அவர்களை விட பத்து மடங்கு தேசப்பற்று மிக்கவர்கள் நாம் என பேசினார்.

அதன்பிறகு, இஸ்லாமியர்கள் தங்கள் தேசப்பற்றை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கும் இந்தியாவில் சம உரிமை உண்டு என்றார்.