மகிழ்ச்சி அளித்த டிசம்பர் மாதம்….. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குஷி….

 

மகிழ்ச்சி அளித்த டிசம்பர் மாதம்….. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குஷி….

கடந்த டிசம்பர் மாதத்தில் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இதனால் அந்த நிறுவனங்கள் சந்தோஷம் அடைந்தன.

கடந்த ஆண்டு தொடக்கம் முதலே நம் நாட்டில் வாகன விற்பனை மிகவும் மந்தமாக இருந்தது. தொடர்ந்து பல மாதங்கள் விற்பனை மிகவும் மோசமாக இருந்ததால் வாகன தயாரிப்பு துறை சேர்ந்த நிறுவனங்கள் கடும் சோகத்தில் மூழ்கின. விற்பனை இல்லாததால் கையிருப்பு அதிகரித்தது. அதனால் பல நிறுவனங்கள் தயாரிப்பை குறைத்தன. மேலும் பல நாட்கள் வேலையில்லாத நாட்களை அறிவித்தன.

மாருதி சுசுகி

இந்நிலையில் கடந்த ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு சலுகைகளை அறிவித்தன. அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அந்த மாதத்தில் முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை அதிகரித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த மாதத்தில் உள்நாட்டில் மொத்தம் 1.24 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2018 டிசம்பரை காட்டிலும் 2.4 சதவீதம் அதிகமாகும்.

மகிந்திரா அண்டு மகிந்திரா

மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் 37,081 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2018 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 1 சதவீதம் அதிகமாகும். அதேசமயம் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை சுமார் 10 சதவீதம் சரிவு கண்டுள்ளது. அந்நிறுவனம் கடந்த மாதத்தில் 50,135 கார்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது. 2018 டிசம்பரில் அந்நிறுவனம் 55,638 கார்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.