மகாராஷ்டிரா அரசியலில் தலைகீழ் திருப்பம்:  ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்த சிவ சேனா!

மகாராஷ்டிரா அரசியலில் தலைகீழ் திருப்பம்:  ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்த சிவ சேனா!

மகாராஷ்டிராவில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் அமர்த்திய ஆளுநரின் செயலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாக சிவசேனா தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க – சிவசேனா கூட்டணியில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டதால் பா.ஜ.க-வால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் துணையுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயன்றது.

shiv sena

சிவசேனாவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர், பெரும்பான்மை கடிதத்தை 24 மணி நேரத்துக்குள் கொடுக்க வேண்டும் என்றார். அந்த நேரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்ததால் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று சிவசேனா தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால், அவகாசம் அளிக்காமல், குடிரயசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைத்தார் ஆளுநர். இதற்கிடையே கூட்டணி முடிவாகிவிட்டதாகவும் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே ஐந்து ஆண்டுகள் முதல்வராக நீடிப்பார் என்றும் பேசப்பட்டுவந்தது.
ஆனால், இன்று காலை திடீரென்று மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது. எட்டு மணிக்கு எல்லாம் பாரதிய ஜனதா கட்சியின் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவி ஏற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார். இது மகாராஷ்டிரா அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. 

bhagat singh

இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. பாரதிய ஜனதா உடன் கூட்டணி என்பது கட்சி முடிவல்ல என்று அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாக அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.