மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் முதல்வரா? முதல்ல கல்யாணம் நடக்கட்டும் அப்புறம் குழந்தையை பத்தி பேசலாம்…. அசாதுதீன் ஓவைசி கிண்டல்

 

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் முதல்வரா? முதல்ல கல்யாணம் நடக்கட்டும் அப்புறம் குழந்தையை பத்தி பேசலாம்…. அசாதுதீன் ஓவைசி கிண்டல்

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் முதல்வராக வாய்ப்புள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, முதல்ல கல்யாணம் நடக்கட்டும் அப்புறம் குழந்தைய பற்றி பேசலாம் என அசாசுதீன் ஓவைசி கிண்டலாக பதில் அளித்தார்.

மகாராஷ்டிராவில் பெரிய கூட்டணி அரசை அமைப்பதற்காக சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைய முயற்சி செய்து வருகின்றன. மேலும் சரத் பவார் கட்சியை சேர்ந்தவரை முதல்வராக்க ஒப்புக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஜதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். 

சிவ சேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்

அதற்கு அசாதுதீன் ஓவைசி, கல்யாணம் நடப்பதற்கு (கூட்டணி) முன்பே குழந்தையை (முதல்வர்) பற்றி பேசுகிறோம். கல்யாணம் நடக்காத வரை அது குறித்து ஆலோசனை செய்வதில் ஒரு பலனும் இல்லை. முதல்ல கல்யாணம் நடக்கட்டும் என கிண்டலாக பதில் அளித்தார். மேலும், பா.ஜ.க. மற்றும் சிவ சேனாவும் ராம் மற்றும் ஷ்யாம் (சகோதாரர்கள்) போன்றவர்கள் மற்றும் அவர்கள் இந்துத்வா சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். மகாராஷ்டிரா மக்களுக்கு ஒரு அரசாங்கம் தேவை என்பது உண்மைதான். பா.ஜ.க. அல்லது சிவ சேனா தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிக்க கூடாது என்பதுதான் எங்களது கட்சியின் நிலைப்பாடாக கருதப்படுகிறது.

சோனியா காந்தி, உத்தவ் தாக்கரே, சரத் பவார்

சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து அரசை அமைத்தாலும் நாங்கள் ஆதரவு அளிக்க மாட்டோம். ஏனென்றால் பா.ஜ.க.வும், சிவ சேனாவும் ஒன்றுதான். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சிவ சேனாவை ஆதரித்தால் எனக்கு இப்பம் சந்தோஷம்தான். அதேபோல் யாருடைய வாக்குகளை வெட்டுவது, யாருடன் கூட்டு சேருவது என்பது மக்களுக்கு தெரியவரும் என ஓவைசி தெரிவித்தார்.