மகாத்மா காந்தி விபத்தில் உயிரிழந்தார்…. பள்ளி பாடப்புத்தகத்தில் சர்ச்சை கருத்து! 

 

மகாத்மா காந்தி விபத்தில் உயிரிழந்தார்…. பள்ளி பாடப்புத்தகத்தில் சர்ச்சை கருத்து! 

ஒரு விபத்து மூலம் மகாத்மா காந்தி மரணமடைந்தார் என்று ஒடிஷா மாநில அரசு வெளியிட்ட கையேட்டில் பதிவிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு விபத்து மூலம் மகாத்மா காந்தி மரணமடைந்தார் என்று ஒடிஷா மாநில அரசு வெளியிட்ட கையேட்டில் பதிவிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மகாத்மா காந்தியின் 150 ஆவது ஆண்டு விழா இந்த ஆண்டு முழுக்க விமரிசையாக கொண்டாட ஆளும் மத்திய பாஜக அரசு முடிவெடுத்து பல்வேறு விழாக்களை நடத்திவருகிறது. அந்த வகையில் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா மாநில அரசு, அம்மாநில அரசு பள்ளிகளில் ஆமா பாபுஜி என்ற 2 பக்க கையேட்டை வழங்கி உள்ளது. அதாவது ஒடிசா மாநிலத்துக்கும் காந்திக்குமான தொடர்பு குறித்தும், மகாத்மா காந்தியின் போதனைகள் குறித்தும் அந்த ஆமா பாபுஜி என்ற கையேட்டில் இடம்பெற்றிருந்தது. 
 

mahatma gandhi

இந்நிலையில் ஒடிசா மாநில அரசால் வழங்கபட்ட அந்த கையேட்டில் தேச தந்தை மகாத்மா காந்தி  டெல்லியில் உள்ள பிர்லா மாளிகை அருகே ஓரு விபத்தில் மரணமடைந்தார் என பதிவிடப்பட்டிருந்தது. மகாத்மா காந்தியை கோட்சே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் மாறாக காந்தி தற்செயலாக விபத்து மூலம் உயிரிழந்தார் என கூறுவது பல்வேறு தரப்பினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரலாற்று பிழைக்கு அம்மாநில அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அந்த கையேட்டை மாணவர்களிடமிருந்து திரும்ப பெற வேண்டும் என்றும்  பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.