மகளை பள்ளியறைக்கு அனுப்ப முயன்ற தந்தை ! போலீசுக்கு போன் செய்து திருமணத்தை நிறுத்திய அதிரடி சிறுமி !

 

மகளை பள்ளியறைக்கு அனுப்ப முயன்ற தந்தை ! போலீசுக்கு போன் செய்து திருமணத்தை நிறுத்திய அதிரடி சிறுமி !

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெற இருந்த குழந்தை திருமணம் அந்த சிறுமியாலேயே தடுத்து நிறுத்தப்பட்ட பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

 உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெற இருந்த குழந்தை திருமணம் அந்த சிறுமியாலேயே தடுத்து நிறுத்தப்பட்ட பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

உத்தரப்பிரதேசம் பிகாபூரை சேர்ந்த சுரபன் நிஷாத் என்பவர் தனது 11 வயது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைக்க திட்டமிட்டிருந்தார். அதற்காக 28 வயது நிரம்பிய நிஷாத் என்பவரை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்து வரும் டிசம்பர் 10-ம்தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்து வந்தார்.

marriage

ஆனால் அந்த சிறுமிக்கு படிப்பில் மட்டுமே அதிக ஆர்வம் இருப்பதால் இந்த கல்யாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த சட்டவிரோத சம்பவம் வெளியில் தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்பதற்காக திருமண ஏற்பாடுகளை மிகவும் ரகசியமாக செய்து வந்துள்ளார் சிறுமியின் தந்தை. 
ஆனால் இதற்கெல்லாம் பயப்படாத அந்த சிறுமி உத்தர பிரதேச காவல் உதவி எண்ணான 112-ஐ அழைத்தார். எதிர்முனையில் பேசிய காவல் துறையினரிடம் தான் படித்துக் கொண்டிருப்பதாகவும், தனக்கு 11 வயது மட்டுமே ஆவதாவும் ஆனால் தன்னுடைய விருப்பத்தை மீறி தனக்கு திருமணம் செய்து வைக்க முயல்வதாகவும் தெரிவித்தார்.

112

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் காவல்துறை இணைந்து திருமண ஏற்பாட்டில் இருந்து  சிறுமியை மீட்டெடுத்துள்ளது. மேலும் இதுபோல் திருமணம் நடத்தக்கூடாது என்று சிறுமியின் தந்தையையும், மாப்பிள்ளை வீட்டாரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர். அதே சமயம் சிறுமி விரும்பியபடியே பள்ளிக்கு அனுப்பப்படுகிறாரா என்பதை கண்காணிக்க தற்காலிகமாக ஒரு காவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

11 வயதில் பயமின்றி காவல்துறைக்கு போன் செய்து பிரச்சனையை தெரிவித்த சிறுமியை அனைவரும் பாராட்டினர். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து என்னதான் விழிப்புணர்வு செய்தாலும், இதுபோன்று திருமணம் என்ற பெயரில் இன்னும் நிறைய முட்டாள்கள் குழந்தைகளை அதல பாதாளத்தில் தள்ளிக்கொண்டிருப்பதை தடுக்க முடியாமல் போய்விடுகிறது.