மகளுக்கு போதை ஊசிப் போட்ட எம்.எல்.ஏ! மகள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

மகளுக்கு போதை ஊசிப் போட்ட எம்.எல்.ஏ! மகள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால், ஒவ்வொரு திருமணத்திலும் சில மனங்கள் ஊமையாய் அழுதுக் கொண்டிருப்பது எத்தனைக் காலங்கள் ஆனாலும் இந்தியாவில் தீரவே தீராது போல.  கெளரவத்திற்காகவும், அந்தஸ்திற்காகவும், ஜாதிகளின் மீதுள்ள வெறியினாலும் மனசுக்குப் பிடிச்சவரைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள பெரும்பாலான பெற்றோர்கள் சம்மதிப்பதே இல்லை. அத்தனை வருடங்களாக ஆசையாசையாய் வளர்த்த மகனோ, மகளோ கல்யாண விஷயத்தில் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் பெற்றவர்கள் எடுக்கும் அஸ்திரங்கள் எல்லாமே அதிர்ச்சி ரகமானதாக இருக்கிறது.

drug

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர்நாத்.  முன்னாள் எம்.எல்.ஏவான இவர், தனது 28 வயது மகளான பாரதி சிங்கை காணவில்லை என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் புகார் அளித்து பரபரப்பைக் கிளப்பினார். போலீசார் இவரது மகளைத் தேடும்  பணியில் ஈடுபட்ட நிலையில், இவரும் மகளைத் தேடும் பணியில் ஈடுபட்டார். 
இந்நிலையில், தான் வேறு ஒருவரை விரும்புவதாகவும், ஆனால் தன் தந்தை வேறொரு எம்.எல்.ஏவின் மகனை திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்துவதாகவும், அதற்கு சம்மதிக்காததால், கடந்த 10 வருடங்களாக தன்னை சித்ரவதை செய்து, தனக்கு போதை ஊசிப் போட்டு  வருவதாகவும் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் நீதிமன்றத்தை கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மகள் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், இது குறித்து பேசிய சுரேந்தர்நாத் சிங், இந்த குற்றச் சாட்டுகளை மறுத்துள்ளதோடு, தன் மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் தான் என்றும், தன் மகளை ஒரு தந்தையாக நல்ல இடத்தில் சம்மந்தம் பண்ணி தர வேண்டும் என்று நினைப்பதெல்லாம் கூட ஒரு குற்றமா? என கேள்வி கேட்டுள்ளார்.