மகளுக்கு தொல்லைக்கொடுக்கும் உங்கள் தொண்டரை எப்படி சமாளிப்பது? மோடியிடம் ஐடியா கேட்கும் இமைக்கா நொடிகள் வில்லன்!

 

மகளுக்கு தொல்லைக்கொடுக்கும் உங்கள் தொண்டரை எப்படி சமாளிப்பது? மோடியிடம் ஐடியா கேட்கும் இமைக்கா நொடிகள் வில்லன்!

17 வது மக்களவை தேர்தலில் பெறும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்று மீண்டும் அரியணை ஏறுகிறது. இந்த வெற்றியை பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

17 வது மக்களவை தேர்தலில் பெறும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்று மீண்டும் அரியணை ஏறுகிறது. இந்த வெற்றியை பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பல்துறை பிரபலங்களும் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப் ட்விட்டர் பக்கத்தில், மோடி அவர்களே தேர்தலில் வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்…   இது அனைவரையும் உள்ளடக்கிய வெற்றி என்று நீங்கள் பேசியிருப்பதற்கும் நன்றி.! உங்கள் எதிர்ப்பாளராக இருக்கும் என் மகளை மிரட்டும் உங்கள் தொண்டரை எப்படி சமாளிப்பது என யோசனை கூறுங்களே எனா தெரிவித்துள்ளார்.

tweet

அந்த பதிவுடன் இன்ஸ்டாகிராமில் தனது மகளுக்கு மிரட்டல் விடுக்கும்வகையில் இளைஞர் ஒருவர் பதிவிட்ட பதிவையும் இணைத்துள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த பலர் பாஜக ஆட்சியின் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்த பதிவு காட்டுகிறது என பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.