மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

 

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

சிட்னி: மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் குரூப் ஏ பிரிவில் நான்கு போட்டிகளிலும் இந்திய அணி அட்டகாசமாக வென்றது. இந்த நிலையில், இங்கிலாந்து அணியுடன் இன்று நடைபெறவிருந்த அரையிறுதி போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படமால் கைவிடப்பட்டது. அதனால் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி 4 லீக் போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்தது. அதனால் அதிக வெற்றிகள் அடிப்படையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ttn

மேலும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் இன்னொரு அரையிறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இப்போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இந்திய அணியுடன் வரும் ஞாயிறு (மார்ச்.8) பெண்கள் தினத்தன்று மோதும். இம்முறை இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றினால் மகளிர் கிரிக்கெட் அணிக்கு நாடு முழுக்க பலத்த பாராட்டும், வரவேற்பும் ஆதரவும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.