மகராஷ்டிராவில் பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய இடி! தாவ தயாராகும் எம்.எல்.ஏ-க்கள்

 

மகராஷ்டிராவில் பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய இடி! தாவ தயாராகும் எம்.எல்.ஏ-க்கள்

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணிக்கு தாவ பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சில மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றும் பாரதிய ஜனதாவால் ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை.

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணிக்கு தாவ பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சில மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றும் பாரதிய ஜனதாவால் ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை. சிவசேனாவின் இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி கோரிக்கையை ஏற்றிருந்தால் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் ஆளுங்கட்சி என்ற அந்தஸ்தோடு வலம் வரலாம் என்று இருந்தனர். ஆனால், ஆட்சியும் போனது, அந்தஸ்தும் போனது என்ற நிலையில் பல பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் வெறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

shiv sena

அதேபோல், மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக முடியுமா என்ற சந்தேகம் மகாராஷ்டிராவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் கட்சி மாற தயாராகிவிட்டார்களாம். ஒரு எம்.பி மற்றம் ஒரு 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சிவசேனாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனராம். இவர்கள் எல்லோரும் தங்கள் சொத்துக்களை பாதுகாக்கவே பா.ஜ.க-வில் இணைந்து பல கோடி செலவு செய்து எம்.எல்.ஏ-க்கள் ஆனவர்கள் என்று கூறப்படுகிறது. பல கோடி செலவழித்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்த இவர்கள் மீது புதிய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனாலேயே தாவ தயாராகிவிட்டார்களாம். 

karnataka bjp mla

எதிர்க்கட்சி உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, பிறகு அவர்களை தங்கள் தாமரை சின்னத்தில் நிற்கவைத்து வெற்றிபெற வைத்து, சட்டமன்றத்தில் தங்களுடைய பலத்தை அதிகரிக்கும் டெக்னிக்கை பா.ஜ.க தான் அறிமுகம் செய்தது. இந்த டெக்னிக்கை பயன்படுத்தி தங்களை சிவசேனா எம்.எல்.ஏ-க்களாக மாற்றிக்கொள்ளும்படி பேரம் பேசி வருகிறார்களார்.  இதனால், விரைவில் மகாராஷ்டிராவில் அரசியல் கூத்து அரங்கேறும் என்று கூறப்படுகிறது.