மகனுக்காக 65 ஆயிரம் மரக்கன்றுகளை அழித்த அ.தி.மு.க எம்.பி! – சென்னை அருகே பரபரப்பு

 

மகனுக்காக 65 ஆயிரம் மரக்கன்றுகளை அழித்த அ.தி.மு.க எம்.பி! – சென்னை அருகே பரபரப்பு

அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக உள்ளவர் வைத்திலிங்கம். கடந்த ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தார். இவருடைய மகன் செங்கல்பட்டு மாவட்டம் மஹிந்திரா சிட்டி அருகே பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டியுள்ளார்.

மகன் கட்டியுள்ள பள்ளிக்கு செல்ல வழியை ஏற்படுத்த 65 ஆயிரம் மரக் கன்றுகளை அ.தி.மு.க எம்.பி-யும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் அழித்துள்ளதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக உள்ளவர் வைத்திலிங்கம். கடந்த ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தார். இவருடைய மகன் செங்கல்பட்டு மாவட்டம் மஹிந்திரா சிட்டி அருகே பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டியுள்ளார். மஹிந்திரா சிட்டி அமைக்கப்பட்ட போது 76 ஏக்கர் நிலம் அஞ்சூர் ஊராட்சிக்கு வழக்கப்பட்டது. அதில் 51 ஏக்கர் நிலம் திறந்தவெளிப் பகுதியாகவும் மீதம் 25 ஏக்கர் சாலை அமைத்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலத்தில் அடர் குறுங்காடு திட்டத்தின் கீழ் 65,000 மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.
அரசுக்கு வழங்கப்பட்ட இந்த நிலத்தில் 3.45 ஏக்கர் நிலத்தை வைத்திலிங்கத்தின் மகன் வாங்கி பள்ளி ஒன்றைக் கட்டியுள்ளார். பள்ளிக்கு செல்ல வசதியாக அரசு செலவில் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக, குறுங்காடு திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டு வரும் மரக் கன்றுகளை அழித்து சாலையை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

ligam

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், “மக்கள் பயன்பாடு இல்லாத இடத்தில் அதிக செலவு செய்து சாலை அமைக்கிறார்கள். இதற்காக அங்கு நடப்பட்டிருந்த மரக் கன்றுகளை எல்லாம் அழித்துவிட்டார்கள். இந்த நிலத்தில் ஒரு காலத்தில் இங்குள்ள மக்கள் விவசாயம் செய்தார்கள். அதிகாரிகளோ, நிலத்தின் தன்மை சரியில்லை, அதனால்தான் மரத்தைப் பிடுங்கி வேறு இடத்தில் நடப்போகிறோம் என்று கூறி அழித்திருக்கிறார்கள். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். ஆனால், உரிய அனுமதியின்றி பழைய காஞ்சிபுரம் மாவட்ட உத்தரவைக் காட்டி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்” என்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கோடிக் கணக்கான ரூபாய் செலவு செய்து மரக் கன்றுகள் நடப்படுகின்றன. அந்த மரக் கன்றுகள் வளர்ந்ததா என்று பார்த்தால் ஒன்றிரண்டு தவிர வேறு எதுவும் வளர்ந்ததாகத் தெரியவில்லை. மக்கள் பணம் இப்படி வீணாக சென்று கொண்டிருக்கும் நிலையில், எம்.பி ஒருவரின் மகனுக்காக மரக் கன்றுகள் அழிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இந்த தவறை செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.