ப.சிதம்பரம் மகன், மனைவி, மருமகள் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து

 

ப.சிதம்பரம் மகன், மனைவி, மருமகள் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், மனைவி, மருமகள் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், மனைவி, மருமகள் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம், மனைவி நளினி சிதம்பரம் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கியதாகவும், இதனை வருமானவரி கணக்கில் காட்டவில்லை எனவும் புகார் எழுந்தது.

இதையடுத்து, இவர்கள் மூவர் மீதும் கருப்புப் பண தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை நடவடிக்கை எடுக்கக்கோரி வருமான வரித்துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நடவடிக்கைக்கு தடை கோரி அவர்கள் மூவர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அணைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம், ஸ்ரீநிதி உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், இவர்கள் மூவர் மீதான வருமான வரித்துறையின் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது