ப.சிதம்பரம் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை: சிபிஐ குற்றச்சாட்டு!

 

ப.சிதம்பரம் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை:  சிபிஐ குற்றச்சாட்டு!

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் கைதாகியுள்ள  ப.சிதம்பரம் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை  என சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

ப.சிதம்பரம் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை:  சிபிஐ குற்றச்சாட்டு!

புதுடெல்லி:  ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் கைதாகியுள்ள  ப.சிதம்பரம் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை  என சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து  ப.சிதம்பரம் நேற்று இரவு  கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, காலை 10 மணியளவில் சிபிஐ  அதிகாரிகள், வழக்கு குறித்து விசாரணையைத் தொடங்கினர். 

 

இந்நிலையில் சிதம்பரத்தை  சிபிஐ அதிகாரிகள் ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் கைதாகியுள்ள  ப.சிதம்பரம் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை  என்று குற்றச்சாட்டிய சிபிஐ அதிகாரிகள், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை உத்தரவிடவேண்டும்’ என்று மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும்  குற்றப்பத்திரிகையில் சிதம்பரம் பெயரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள சிபிஐ, சிதம்பரம் பேசாமல் இருப்பது சுதந்திரமாக இருக்கலாம், ஆனால் வழக்கிற்கு ஒத்துழைக்காமல் இருக்க முடியாது’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.