ப.சிதம்பரத்தை ஜெயிலுக்குள்ள வைச்சு விசாரியுங்க! தேவைப்பட்டால் கைது கூட பண்ணிக்கோங்க- சிறப்பு நீதிமன்றம்

 

ப.சிதம்பரத்தை ஜெயிலுக்குள்ள வைச்சு விசாரியுங்க! தேவைப்பட்டால் கைது கூட பண்ணிக்கோங்க- சிறப்பு நீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ். மீடியா பணமோசடி வழக்கில், ப.சிதம்பரத்தை ஜெயிலுக்குள் வைச்சு விசாரியுங்க. தேவைப்பட்டால் கைது செய்து கொள்ளலாம் என அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கடந்த செப்டம்பர் 5ம் தேதி முதல் திஹார் சிறையில் உள்ளார். இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா பணமோசடி வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்து செய்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை தீவிரமாக இருந்தது.

ஐ.என்.எக்ஸ். மீடியா

இதனையடுத்து ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்த அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹர், போதுமான ஆதாரம் இருந்தால் பணமோசடி குற்றச்சாட்டில் ஒருவரை நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை கைது செய்ய முடியும்.

அமலாக்கத்துறை

ஆனால் இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட நபர் ஏற்கனவே ஒரு வழக்கில் சிறையில் உள்ளார். அதனால் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தின் அனுமதி அவசியம். பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை திஹார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அங்கு வைத்தே விசாரணை செய்து கொள்ளலாம். விசாரணையின் முடிவுகளை பொறுத்து தேவைப்பட்டால் அவரை கைது செய்து கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்தார்.