ப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை

 

ப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இதனையடுத்து, அமலாக்கத்துறையினர் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேட்டில் பணம் கையாடப் பட்டது மற்றும் அந்த பணத்தின் முதலீடு குறித்து ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். அந்த மனுவிற்கு நீதி மன்றம் அனுமதியளித்ததால், அவரிடம் விசாரணை மேற்கொண்டு நேற்று அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்தைக் கைது செய்தனர். விசாரணை முடிந்த பின்னர்  இன்று ப.சிதம்பரம் சி.பி,ஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படுவார். 

 ப.சிதம்பரம்

இந்நிலையில், மீடியா முறைகேட்டு வழக்கில் உண்மையைக் கண்டுபிடிக்கத் தீவிரம் காட்டி வரும் அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளர் கே.வி.பெருமாள், 10 ஆண்டுகளுக்கு மேல் சிதம்பரத்துடன் இருந்ததால் அவருக்கு இந்த முறைகேடு பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்பதன் அடிப்படையில் இன்று விசாரணை நடத்தவிருக்கின்றனர். ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி பெருமாளிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று மீண்டும் அவரிடம் விசாரணையைத் தொடர உள்ளனர்.