போலீஸ் சீருடையில் டிக் டாக்கில் அலப்பறை: துணை நடிகையை எச்சரித்த போலீசார்!

 

போலீஸ் சீருடையில் டிக் டாக்கில் அலப்பறை: துணை நடிகையை எச்சரித்த போலீசார்!

டிக் டாக் வீடியோவை பதிவிட்டு வந்தார். இதனால் பெண் போலீஸ் டிக் டாக்கில் கூத்தடிக்கிறார் என்பது பலரும் விமர்சித்து வந்தனர். 

டிக் டாக்கால் தினமும் ஏதோ  ஒரு வில்லங்கம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதையும் நாம்  கேள்விப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனாலும் இவர்களின் அலப்பறைகள் மட்டும் ஓய்ந்தபாடில்லை. அந்த வகையில் ராதிகா என்ற ஐடியில் இருந்து தினமும் போலீஸ் உடையில் பெண் ஒருவர் டிக் டாக் செய்து வீடியோவை வெளியிட்டு வந்தார். அதே சமயம் அவர் காவலர் உடையிலிருந்த மற்றவர்களுடனும் சேர்ந்து டிக் டாக் வீடியோவை பதிவிட்டு வந்தார். இதனால் பெண் போலீஸ் டிக் டாக்கில் கூத்தடிக்கிறார் என்பது பலரும் விமர்சித்து வந்தனர். 

ttn

இதையடுத்து இந்த வீடியோக்கள் போலீசாரின் கவனத்திற்குச் செல்ல, டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட ஐடியில் உள்ள வீடியோக்களை வைத்து அவர் நர்சாக இருந்து துணை நடிகையான ஸ்ரீனிகா என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். லைக்கிற்கு ஆசைப்பட்டு அந்த பெண் இவ்வாறு  செய்து வந்துள்ளார். இதனால் காவல்துறையை இழிவுபடுத்தும்  வகையில் இனி வீடியோ  வெளியிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். 

ttn

உண்மையான காவலர்கள் என நினைத்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த வீடியோக்கள் பெண் காவலர்களுக்கு அவ[பெயரை வாங்கித்தருவதாக போலீசார் வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.