போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்: திருப்பூரில் பரபரப்பு!

 

போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்:  திருப்பூரில் பரபரப்பு!

போலீசார் வாகன சோதனைகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிர படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று காலை  1596 ஆக இருந்த நிலையில், புதிதாக மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்துள்ளது. இதனால் போலீசார் வாகன சோதனைகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிர படுத்தி வருகின்றனர். 

ttn

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அங்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அதனால் அந்த பகுதிக்கு மக்கள் செல்லாத வழியில் தடுப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி அந்த பகுதிகளில் சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். 

இந்நிலையில் போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்தும், கடைகளை திறக்க வேண்டும் என்று அனுமதி கோரியும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், மக்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் மீது வழக்குபதிவு செய்ய மாட்டோம் என்று போலீசார் உறுதியளித்ததையடுத்து, மறியலில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.