போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

 

போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

கஜா புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாத்து, மறுவாழ்வை உறுதிப்படுத்தும் நிவாரண நடவடிக்கைக்களை தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: கஜா புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாத்து, மறுவாழ்வை உறுதிப்படுத்தும் நிவாரண நடவடிக்கைக்களை தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘கஜா’ புயல் நேற்று நள்ளிரவு நேரத்தில் வேதாரண்யம் அருகில் கரை கடந்துள்ளது. கன மழையுடன் பலத் புயல் காற்று வீசியதால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு பெயர்ந்து வீசப்பட்டடிருக்கிறன. குடிசை வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகளும், மின் கம்பங்களும் அடியோடு சாய்க்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் சேத மடைந்துள்ளன. மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன, கால்நடைகளும் சேதப்பட்டுள்ளன.

குடியிருப்புகளில் வசிக்க முடியாத பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்வும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்த மோசமான இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாத்து, மறுவாழ்வை உறுதிப்படுத்தும் நிவாரண நடவடிக்கைக்களை தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், அரசு அலுவலர்களுடன் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது என வலியுறுத்தியுள்ளார்.